அகிலன் படத்தின் மொத்த வசூல் இது தான்;

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில், கல்யாண் குமார் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஹரிஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அகிலன்”.

கப்பல் வர்த்தகத்தின் போது நடக்கும் போதை பொருள் கடத்தல்கள், அகதிகளை வேறு நாட்டிற்கு மாற்றுதல் போன்ற பல தவறான செயலில் ஈடுபடும் ஒருவராக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும், ஒரு துறைமுகத்தின் செயல்பாட்டை வெளிப்படையாக இப்படம் காட்டுகிறது.

ட்ரைலர் ரிலீஸ் ஆனபோது, இப்படத்திற்கு இருந்த வரவேற்பை பார்த்தால் படம் நிச்சயம் வசூலை குவிக்கும் என்று சினிமா துறையே நினைத்தது.

ஆனால், அதற்கு மாறாக படம் படுதோல்வியடைந்துள்ளது என்றே சொல்லலாம். அகிலன் படம் இதுவரை மூன்று நாட்களில் 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இது படத்தின் பட்ஜெட்டை கூட மீட்டெடுக்கவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.