மிஷ்கினுக்கு 10 லட்சம்; கௌதம் மேனனுக்கு இவ்வளவு தானா? – லியோ படத்திற்கு நடிகர்கள் வாங்கும் சம்பளம்;

LEO CAST SALARY

விஜய்யின் கடந்த சிலப்படங்கள் வசூல் வேட்டையாடி அவரின் மார்க்கெட்டை இந்திய அளவில் மாஸாக ஓபன் செய்துள்ளது.

அதற்கு ஏற்றவாறு படத்தின் பட்ஜெட்டும் பெருசாகவே இருக்கிறது. காரணம், விஜய்யின் சம்பளம் மட்டுமே 100 கோடிக்கு மேல். ஆனால், லியோ படத்திற்காக விஜய் பெரும் சம்பளம் 60-80 கோடி தானாம். ஏனென்றால், படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால். அவர்களின் சம்பளத்தையும் மனதில் வைத்து தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் சம்பளத்தை குறைத்துள்ளதாம்.

அதற்கு மாறாக, தியேட்டர் வசூலில் ஷேர் கொடுப்பதாகவும் விஜய்யுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.

மேலும், சஞ்சய் தத்துக்கு சம்பளமாக 10 கோடி ரூபாயும் பேசப்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி, த்ரிஷாவுக்கு 3கோடி சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாம்.

இது ஒரு புறம் இருக்க, கோலிவுட்டில் நட்சத்திர இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் கெளதம் மேனனும் இப்படத்தில் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் மிஷ்கினுக்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் சம்பளமும், கௌதம் மேனனுக்கு 5 லட்ச ரூபாய் சம்பளமும் வழங்குகிறதாம் படக்குழு.