100 நாட்களில் 100 கோடி வசூல்; சிம்புவின் வாய்ப்பை பயன்படுத்தும் பிரதீப் ரங்கநாதன்;

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி 100வது நாளை வெற்றிகரமாக எட்டி இருக்கும் நிலையில், படத்திற்கான மொத்த வசூல் விவரம் தற்போது பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி உள்ளது.

வெறும் 7 கோடியில் தயாரான லவ் டுடே திரைப்படம் 100 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. மேலும், தெலுங்கில் இப்படம் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அது மட்டுமின்றி, ஓடிடி மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்றதன் மூலம் மட்டும் இப்படத்திற்கு 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாம். மொத்தத்தில், லவ் டுடே திரைப்படம், வசூல் மற்றும் வியாபாரத்தில் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

அடுத்த பட வாய்ப்பு:

மேலும் இந்த படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது, பிரதீப் ரங்கநாதன் சிம்புவின் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். நீண்ட நாட்களாக இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமல் இருந்த நிலையில், சிம்பு கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் இந்த வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு சென்றிருக்கிறது.

சிம்பு கொரோனா குமார் படத்திலிருந்து வெளியேறி விட்டதால், அவருக்கு பதில் இயக்குனர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.