வசந்த முல்லை விமர்சனம்

VASANTHA MULLAI MOVIE REVIEW

ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில், பாபி சிம்ஹா, கஷ்மீரா பர்தேசி, ஆர்யா, சரத் பாபு மற்றும் சிலர் நடித்துள்ள படம் “வசந்த முல்லை”.

ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்பதால் நான்கு மாத காலம் தூங்காமல் வேலை பார்க்கிறார் பாபி. ஒரு கட்டத்தில், அவரை அறியாமலே அவர் தூங்க ஆரம்பிக்கிறார். அதை “ப்ளாக் அவுட்” என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி இருக்க, வேலை ஏதும் பார்க்காமல் சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் வலியுறுத்த. தனது மனைவி கஷ்மீராவுடன் வெளியூர் செல்கிறார் பாபி.

அங்கு இவர்கள் செல்லும் வழியில் கார் ஓட்டும் கஷ்மீரா ஏதோ மீது காரை மோதிவிட, அருகிலுள்ள விடுதியில் தங்கலாம் என முடிவெடுக்கின்றனர். அப்போது, விடுதியில் திடீரென, கஷ்மீராவுக்கு மூச்சு திணறல் ஏற்பட, மருந்து வாங்க அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு செல்கிரார் பாபி.

அவர் திரும்பி வந்து பார்த்தால் இவர்கள் தங்கியிருந்த இடத்தில் கஷ்மீரா இல்லை. மேலும், இவர்கள் விடுதி எடுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. பாபி சிம்ஹா குழப்பத்தில் இருக்கும் அதே சமயம், யாரோ முகம் தெரியாத நபர் அம்பு எய்து பாபியை கொலை செய்ய முற்படுகிறார்.

அந்த சண்டையில், கஷ்மீராவை கண்டு பிடிக்கிறார் பாபி. அப்போது, எதிர்பாராத விதமாக கஷ்மீரா இறந்து போகிறார்.

அதன் பின், விடுதி உரிமையாளர் ஜன்னல் வழியில் ஏதோ கார் வருகிறதே என்று பார்த்தால் அந்த காரில் பாபி சிம்ஹாவும், கஷ்மீராவும் வந்து இறங்குகிறார்கள். அங்கு ஆரம்பிக்கிறது இந்த லூப்….

கொலையாளி யார்? எதனால் இந்த லூப் வருகிறது? லூப்பில் இருந்து பாபி சிம்ஹா தப்பித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை…

உடம்பை பிட்டாக வைத்து முழு ஹீரோவாகவே நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. தூக்கமின்மை அவரின் முகத்தில் தெரிவதற்காக எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்று தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் சிம்ஹா.

பயப்படும் காட்சி, ரொமான்டிக் காட்சி என அனைத்திலும் ஸ்கொர் செய்துள்ளார் கஷ்மீரா.

சர்பட்டா பரம்பரை படத்தின் கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார் ஆர்யா.

சரியான திட்டமிடலுடன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரமணன். 4 கதாபாத்திரம், அதை சுற்றி ஒரே பங்களாவில் நடக்கும் ஒரு கதைக்களம் என முதல் பாதியை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர். இருந்தாலும், படத்தில் ஏதோ ஒரு குறை. க்ளைமாக்ஸ் காட்சியை கொஞ்சம் கவனமாக எழுதியிருக்கலாம். இருந்தாலும் தூக்கத்தின் முக்கியத்தை பேசியதற்கு பாராட்டுக்கள்.

இசையில் கூடுதல் கவனம் தேவை ராஜேஷ் முருகேசன். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, மலைப் பிரதேசத்தின் அழகையும், பங்களாவின் பிரம்மாண்டத்தையும் சிறப்பாக காட்சி படுத்திருக்கிறார்.

வசந்த முல்லை – டீசண்ட் த்ரில்லர்.