கொடை விமர்சனம்

KODAI MOVIE REVIEW

கார்திக் சிங்கா, அனன்யா, ஆனந்த் பாபு, ரோபோ ஷங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, போஸ் வெங்கட், அஜய் ரத்னம் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “கொடை”. ராஜா செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கொடைக்கானலில் நடக்கும் இக்கதையானது, ஹீரோயின் அனன்யாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ஹீரோ கார்த்திக். அவருக்கு பல மொக்கையான ஐடியாக்களை கொடுக்கிறார் ஹீரோவின் நண்பரான ரோபோ ஷங்கர்.

அதே ஊரில் பண கஷ்டத்திலோ, அல்லது நிறைய பணம் வைத்திருப்பவர்களையோ நேக்காக ஏமாற்றும் வேலையை செய்கிறார் அஜய் ரத்னம். அஜய் ரத்னத்தின் கூட்டாளிகளான போஸ் வெங்கட், மாரிமுத்து மற்றும் கராத்தே ராஜா இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் சம்பந்தமே இல்லாத நபர்கள் என்றாலும். இருவரும் எப்படி சந்திக்கிறார்கள், பணத்தை ஹீரோவிடம் அஜய் எப்படி ஏமாற்றுகிறார். ஏமாறும் பணத்தை எப்படி மீட்டெடுகிறார் என்பது படத்தின் மீதிக்கதை…

ஹீரோவாக நடித்துள்ள கார்த்திக் சிங்காவுக்கு வயது எப்படியும் ஒரு 25-30 வயதுக்குள் தான் இருக்கும். அப்படி இருக்க யோகி பாபுவை நண்பராக தெர்ந்தெடுத்திருக்கலாம். இல்லை என்றால் வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாம். ஏனென்றால், ரோபோ ஷங்கரை தனுஷ் மற்றும் சிவ கார்த்திகேயனுக்கு நண்பர் என்றபோதே கடும் விமர்சனங்கள் எழுந்தது.

நடிப்பில் கார்த்திக் சற்று அமெச்சூராகவே நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகள படுத்தியிருந்தார் கார்த்திக். இவருக்கு ரொமான்ஸை விட ஆக்ஷன் காட்சிகள் பொருத்தமாக இருக்கிறது.

ரோபோ ஷங்கரை பற்றி என்ன சொல்வது? காமெடி என்ற பெயரில் அசிங்கமாக பேசி. அதை சென்சார் போர்டே மியூட் செய்து. எதற்காக இந்த கேவலம். காமெடி என்பது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும். கொஞ்சமாவது ஆதித்யா, சிரிப்பொலி போன்ற சேனல்களை பார்த்து காமெடி என்றால் என்னவென கற்றுக்கொள்ளுங்கள் ரோபோ ஷங்கர்.

ஹீரோயினுக்கு பெரிதாக இப்படத்தில் காட்சிகள் இல்லை என்றாலும் வந்த காட்சிகள் அனைத்திலும் சிறப்பு சேர்த்துள்ளார் அனன்யா.

போஸ் வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், நளினி, கே.ஆர்.விஜயா, அஜய் ரத்னம் என பல திறமையான நடிகர்களை தேர்வு செய்தது சிறப்பு. ஆனால், கதையில் சுவாரஸ்யம் சற்று குறைவாக இருந்தது. திரைக்கதையில் மட்டும் சிறு மாற்றம் செய்திருக்கலாம் மற்றபடி ஒரு ஜாலியான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜா செல்வம்.

முதல் பாதியில் கதையை ஓபன்அப் செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

இசை, கேட்கும் ரகம். ஒளிப்பதிவு நன்றாக இருந்தது, அதுவும் ஒவ்வொருவருக்கும் பில்ட் அப் காட்சிகள் வைத்து ஒளிப்பதிவு மூலமாக மாஸ் காட்டியது சிறப்பு.

கொடை – பண மோசடிக்கான எச்சரிக்கை.