சிவன் என் முதுகின் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்: தனுஷ் போட்ட பதிவால் கோலிவுட்டில் சலசலப்பு!
பர்சனல் வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வந்த நடிகர் தனுஷ், திடீரென்று மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார்.
அதன் பின்னர் முழு மூச்சாக தொழில் கவனம் செலுத்திய தனுஷ் ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இதில் இட்லி கடை படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கே வந்த அஜித்தின் குட் பேட் அக்லி நாங்களும் அதே தேதியில் வெளியாக இருக்கிறோம் என்று அறிவிப்பை தட்டிவிட்டது. இதனால்தான் இட்லிகடை படத்தை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைப்பதற்கு படக்குழு முடிவெடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே, தனுஷூக்கும் – தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
தனுஷ் தங்கள் படத்தில் நடப்பதாகக் கூறி, முன்பணம் வாங்விட்டு தற்போது வரை படப்பிடிப்பிற்கு கால்ஷீட் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பங்குதாரர், கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டு ஞ்சாயத்தை கிளப்பினார். அதில், ஆர்.கே. செல்வமணியிடம் பல கேள்விகளை கேட்டு இருந்தார். அதற்கு செல்வமணியும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பெப்சி-யை தாண்டி தமிழ்நாடு தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை தொடங்கிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், ‘ தனுஷ் மீது இரண்டு புகார்கள் இருந்தன. அதில், தயாரிப்பாளர் சங்க தலைவருக்கு ஒரு படத்திற்கும், கதிரேசனுக்கு ஒரு படத்திற்கும் தனுஷ் கால்சீட் தரவேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இரண்டு படத்திற்கும், தனுஷின் கால்ஷீட் தர வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். அதுதான் முறை.. எங்கேயும் எப்போதும் நாங்கள் தனுஷிடம் 16 கோடி வாங்கித் தாருங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை நாங்கள் கால்ஷீட்டைதான் கேட்கிறோம்.’ என்று பேசினர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு பக்கம் நயன் தாராவுக்கும்- தனுஷூக்கும் இடையேயான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்சினைகள் தனுசை நோக்கி இருக்கும் நிலையில், தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில், சிவன் ஓவியம் வரையப்பட்ட சுவரின் முன்னால் அமர்ந்திருக்கும் தனுஷ் புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது. அதில், ‘ சிவன் எப்போதும் முதுகின் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். வாரணாசி காதல்.. ஹர ஹர மஹாதேவ்.. ஓம் நமச்சிவாய’ என்று பதிவிட்டு இருக்கிறார்.