தரமான சம்பவம் பண்ணும் GBU ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், கார் ரேஸராகவும் இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar) .

தற்போது இவரின் நடிப்பில், ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad ugly) . இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில், தயாராகிவரும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் கேங்ஸ்டராக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, பிரபு, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, ரகு ராம், மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து இப்படமானது முழு மூச்சாக உருவாகி வந்தது. ஆரம்பத்தில் இப்படமானது கடந்த 2025, ஜனவரி மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் இந்த குட் பேட் அக்லி படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் 3 வேடங்களில் நடித்துள்ளார் எனக் கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரிலீசிற்கு இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தற்பொழுது இதனை AK ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.