பிரதீப் ரங்க நாதனின், அடுத்த படம் பட பூஜையுடன் தொடங்கியது!

‘லவ் டுடே’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின், ‘டிராகன்’ படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து அவர் விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இதை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.

இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ஹிருது ஹரூன், டிராவிட் செல்வம் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.