பாவனா, கணபதி ராம், ஜெயபிரகாஷ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இசையமைப்பாளர் வருண் உன்னி இசையமைப்பில் இயக்குனர் ஜெய் தேவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் ஆர்க்கிடெக்சராக இருக்கும் பாவனா, கன்ஸ்ட்ரக்சன் போது ஒரு கோவிலை இடிக்க நேரிடுகிறது. அதே நேரத்தில் அவரது அப்பா மதுரையில் அமானுஷ்யமாக இறந்து விடுகிறார். அன்றிலிருந்து அவர் தூக்கமின்மையால் தவிக்கிறார். வேலையை விட்டு நின்று விடலாம் என்று யோசிக்கையில் அந்த கம்பெனி முதலாளி ஜே பி யின் வற்புறுத்தலால் மீண்டும் வேலைக்கு செல்கிறார், விட்ட பணியை மீண்டும் தொடங்குகிறார். ஆனால் அந்த அமானுஷ்யம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் என்ன? ஏன்? என்பதை கண்டுபிடிப்பதே டோர் படத்தின் ஒட்டுமொத்த கதை.
ஒரு கதையை சொல்வது எளிது ஆனால் திரைக்கதையாக எடுப்பது சிரமம். ஆனால் இந்த கதையில் எந்த ஒரு புதுமையான அம்சங்கள் இல்லாத பட்சத்தில் இது நேர்த்தியான திரை கதையாகவே எடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதியில் வெறும் மிரட்டலாகவே இருந்து இரண்டாம் பாதியில் உப்பு சப்பில்லாமல் முடிவதே இந்த படத்தின் மிகப்பெரிய திரைகதை சொதப்பல்களுக்கு காரணமாக தெரிகிறது.
இசையமைப்பாளர் வரும் உண்மையின் பின்னணி இசை காட்சிகளை தாண்டி மிக கூடுதலாக தெரிகிறது. ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவும் மிக அருமையாக இருக்கிறது.
இந்த படத்தின் இயக்குனர் ஜெய்தேவ் இந்த கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி அதன் பிறகு திரைக்கதை வடிவமைப்பில் கொண்டு வந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் இந்த படத்திற்கு டோர் என்று டைட்டில் வைத்தது ஏன் என்று இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆக மொத்தத்தில் டோர் பெரிதாக இருக்காத ஒரு பேய் படம்.