வருணன் திரைவிமர்சனம்!

ராதாரவி,சரண்ராஜ், துஷ் யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய வேல்முருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

சென்னை ராயபுரத்தின் ஒரு ஏரியாவில், தண்ணிருக்கேன் விற்பனை செய்யும் ராதாரவி சரண்ராஜ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தொழிலில் ரீதியாக போட்டி இருந்தாலும் அவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் ஏரியாவை பிரித்துக் கொண்டு சுமூகமாக தொழில் செய்து வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு கீழே வேலை செய்து வரும் தொழிலாளிகளுக்கு இடையே எப்பொழுதும் மோதல் நடைபெறுவது சகஜம். இந்த இரு தரப்பினருக்கும் இடையே இந்த பிரச்சினையை தட்டிக் கேட்கும் காவல் அதிகாரி, தண்ணீருக்கே நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் ஆன தொழில் போட்டி பெரும் பகையாக உருவெடுக்க அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை சொல்லும் படமே வருணன்.

ராதாரவிக்கு இனிமேல் இது மாதிரியான நடிப்புதான் பெஸ்ட் என்ற அளவிற்கு இந்த வயதிலும் ஒரு பெர்பார்மன்ஸ் கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சரண்ராஜை திரையில் காண்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்தை டம்மியாக்கி எழுதியிருப்பது சற்று சோகம் தான். துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடிப்பில் இன்னும் மெருகேற வேண்டும். கேப்ரியல்லா நன்றாக நடித்திருந்தாலும் பெரிதாக ஈர்க்கவில்லை.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் சுறுசுறுப்பாக இருந்தாலும், கதை நகர நகர பெரும் தொய்வை தருகின்றன. இந்தத் தொய்வு இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாகி, கடைசியில் சலிப்பை கதந்து பின் அயர்ச்சியை குடுக்கிறது. வழக்கமான தெரிந்த கதை தான் என்றாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ஒரு ஏரியாவை மிக அழகாகவும் ரம்யமாகவும் காட்டி இருக்கும் ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுகள்.

பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

படத்தின் இயக்குனர் ஜெயவேல் முருகன், கதையில் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவத்தையும், கவனத்தையும் அதிகமாக்கி இருந்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் வருணன் படம், வருண பகவானே வந்து ஆசீர்வதித்தாலும் மக்கள் திரையரங்குக்கு படையெடுப்பார்களா என்பது சந்தேகமே?