ராபர் திரை விமர்சனம்

மெட்ரோ படப்புகழ் சத்யா, டேனியல் ஆனி போப், சென்றாயன், ஜெயபிரகாஷ், தீபா ஷங்கர் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் எழுத்தில், ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார், ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஜோஹன் இசையில், இயக்குனர் எஸ் எம் பாண்டி இயக்கி வெளியாகி இருக்கும் படம்.

பாசக்கார அம்மாவின் பிள்ளையாக வரும் சத்தியா, சென்னையில் ஒரு கால் சென்டரில் வேலை பார்க்கிறார். ஆனால் அவருக்கு பெண்களோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதனால் யாரையும் லவ் பண்ணுகிறேன் என்று சொல்லாமல் நேரடியாக மேட்டருக்கு அழைக்கிறார். ஆனால் யாரும் வரவில்லை. ஆனால் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரே ஒரு பெண் மட்டும் பணம் இருந்தால் அவரை திரும்பி பார்ப்பார் என்ற நம்பிக்கையில், செயின் திருட்டு வேலையில் ஈடுபட ஆரம்பிக்கிறார். நாளடைவில் இது ஒரு போதையாக மாற, இவரால் பல்வேறு துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் மெட்ரோ சத்யா இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டாரா? அடுத்து என்ன செய்தார் என்பதை சொல்வதே பராபர் படத்தின் ஒட்டுமொத்த கதையும்.

மெட்ரோ சத்யாவிற்கு உடல் Etra நன்றாக இருக்கிறது ஆனால் நடிப்பு மொழி நன்றாக இல்லை. டேனியல் ஆனி போப் இந்த கதாபாத்திரத்திற்கு சுத்தமாக செட்டாகவில்லை. JB மற்றும் பாண்டியன் நடிப்பு அபாரம், தீபா சங்கர் நடிப்பு வழக்கம்போல் ரகம்.

ஏற்கனவே இவர் மெட்ரோ படத்தில் இதே செயின் வழிப்பறி பற்றிய கதையை எடுத்திருந்ததால், இந்த படமும் அதன் இரண்டாம் பாகத்தைப் போல் வரும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரைக்கதையில் சொதப்பலோ சொதப்பல்.

படத்தின் இசையால் இந்த படம் கொஞ்சம் தப்பித்து இருக்கிறது.

ஒளிப்பதிவு இந்த படத்திற்கு கொஞ்சம் ஒத்து ஊதியிருக்கிறது.

இயக்குனர் SM பாண்டி, இந்த கதையை இன்னும் கொஞ்சம் நேர்த்தியான திரைக் கதையாக அமைத்து படமாக எடுத்திருந்திருக்கலாம். அதேபோல் நடிகர்கள் தேர்வையும் கதைக்கு ஏற்ப கொஞ்சம் கவனத்தில் கொண்டு தேர்ந்தெடுத்து இருந்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் ராபர் படம் ஒரு சுமார் ரகம்.