நடிகை சௌந்தர்யா மரணம்: நடிகர் மோகன் பாபு தான் குற்றவாளியா?

தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக மின்னியவர் தான் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக தமிழில் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

சௌந்தர்யாவின் மரணத்திற்கு நடிகர் மோகன் பாபு தான் காரணம் என சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்த சம்பவம்… டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் நிகழ்வில் கலந்து கொள்ள, தன்னுடைய சகோதரருடன், கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டு சௌந்தர்யா உயிரிழந்தார். சொந்தர்யா அந்த சமயத்தில் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. சௌந்தர்யா இறந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து, சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என சிட்டி மல்லு கூற என்ன காரணம்? பழிவாங்கும் முயற்சியா? அல்லது சௌந்தர்யா மரணத்தில் ஏதேனும் உண்மை மறைக்க படுகிறதா? என பல கேள்விகள் மனதிற்குள் எழ துவங்கியது.

பின்னர் சௌந்தர்யாவின் சொத்தை அவர் அபகரிக்க திட்டம் போட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறினார். தற்போது இது குறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக பேசியுள்ள சௌந்தர்யாவின் கணவர் ரகு, இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. என் மனைவியின் மரணம் பற்றி தவறான தகவல் பரவி வருகிறது. மோகன் பாபுவுடன் 25 வருடங்களாக நல்ல நட்புறவில் இருக்கிறோம். இந்த ஆதாரமற்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.