நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் குட் பே அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
மைத்ரி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இச்சூழல் படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பாடல் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு பாடலை இயக்குநர் டி.ஆர். பாடி உள்ளாராம். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் அண்டனி படத்தில் டி.ஆர் பாடிய பாடல் மெகா ஹிட் ஆனது. இந்நிலையில், இப்படத்திலும் ஒரு பாடலை அவர் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது.
மேலும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். போதாக்குறைக்கு ஷாலினி மற்றும் சிம்ரன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிம்புவும் கேமியோ ரோல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.