அந்தப் புடவையை அணிந்து கொண்டு தான் தேசிய விருது வாங்குவேன்: சாய் பல்லவி!

அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படம் தான் தண்டேல். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். மீனவர்களை மையப்படுத்திய இந்தப் படம், காதல் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம், ரசிகர்களின் பேராதரவோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான தண்டேல் தற்போது வரையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வெற்றி படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் ஒரு பான் இந்தியா படத்திற்கு இந்த வசூல் மிகவும் குறைவு என்பதே தயாரிப்பாளர் தரப்பின் வருத்தம்.

தண்டேல் படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது. தற்போது ‘ஏக் தின்’ மற்றும் ‘ராமாயணா பார்ட் 1 ‘ ஆகிய ஹிந்தி படங்களில் சாய் பல்லவி நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த சாய் பல்லவி தன்னுடைய சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமரன் படத்திற்கு ரூ.3 கோடி வாங்கிய சாய் பல்லவி தண்டேல் படத்திற்கு ரூ.5 கோடி வாங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் தனியார் மீடியாவிற்கு அளித்த பேட்டியில் சாய் பல்லவி தேசிய விருது வாங்குவதே தன்னுடைய கனவு என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது… நான் 21 வயதாக இருந்த போது என்னுடைய பாட்டி என்னுடைய கல்யாணத்திற்காக புடவை ஒன்றை பரிசாக கொடுத்தார். ஆனால், எனக்கு எப்போது திருமணம் என்று தெரியாத போது பாட்டி கொடுத்த அந்த புடவையை இப்போது வரை நான் ஒரு பொக்கிஷம் போல் வைத்துள்ளேன். எப்பொழுது நான் தேசிய விருது போன்ற உயரிய விருதுகளை பெருகிறேனோ… அப்போது நான் அந்த சேலையை அணிந்து தான் வாங்குவேன்”.

சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான, கார்கி படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமரன் படத்திற்கும் சாய்பல்லவிக்கு தேசிய விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சாய்பல்லவியின் கனவு இந்த ஆண்டு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.