சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள் எதுவும் வாழ்க்கைக்கு உதவாது! ராஷ்மிகா!

கடந்த 2016 ஆம் வருடம் வெளியான “கிரிக் பார்ட்டி”என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும், அனிமல் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் அறிமுகமானார். தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

இவர் சமீபத்தில் புஷ்பா-2 படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். இந்நிலையில் சாவா பட நிகழ்ச்சியில் பேசிய இவர்,சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று கூறியுள்ளார். அதாவது, “சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவது. அது ரசிகர்களின் அன்பால் கிடைப்பது. அது வெறும் பெயர் மட்டும்தான். ரசிகர்கள் அன்பை எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். அவர்களின் அன்புக்காக நான் என்னுடைய துக்கத்திற்கு பாய் செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.