ஸ்ரீகாந்த், சிந்தியாலூர்தே, எம் எஸ் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன் மற்றும் ராதாரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் கை நிறைய சம்பாதிக்கிறார். ஆனாலும் அவருக்கு வரப்போற மனைவியும் வேலைக்கு போக வேண்டும். மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து அடுத்த கட்ட வாழ்வை நோக்கி நகர வேண்டும் என்று எண்ணுகிறார். அதற்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் பணம் தான் வாழ்க்கை என்று முடிவெடுக்கிறார். இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழராக வரும் பெண்ணான சிந்தியா, ஸ்ரீகாந்த் உடனான திருமணத்திற்கு பிறகு வேலைக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இவர்கள் இருவருக்குமான முற்றலும் மோதலும் குடும்பத்தினரடையேயும் விரிசலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. இதிலிருந்து இவர் எப்படி தப்பித்தார் மறுபடியும் குடும்பம் ஒன்றாக சேர்ந்ததா? இல்லையா?என்பதுதான் தினசரி படத்தின் கதை.
இந்தப் படத்தின் நாயகி சிந்தியா அமெரிக்க வாழ் தமிழர். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர் பல விமர்சனங்களை சந்தித்தார். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நன்றாக நடித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பு அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பிரேம்ஜி காமெடி காமெடியாக இல்லை. நடிகர்களின் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கலாம்.
திரைக்கதை மிக மிக தொய்வாக செல்கிறது. அதில் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.
படத்தின் ஒளிப்பதிவும் இன்னும் கொஞ்சம் அழகாக காண்பித்திருக்கலாம்.
இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை.
இவ்வளவு குறைகள் இருந்தாலும் இந்த படத்தை ஒரு தடவை பார்க்க வேண்டும். காரணம் என்னவெனில், எந்த ஒரு மனிதனுக்கும் குடும்பம் ஒரு மிகப்பெரிய பலம், மனைவி அதைவிட பெரிய பலம் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. ஆக மொத்தத்தில் தினசரி ஒரு தடவை பார்க்கக்கூடிய படம்.