கேன்சேஞ்சர் படத்தின் பாடலுக்காக சங்கர் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

ராம் சரணின் RRR படம் இந்திய அளவில் செம்ம ஹிட் கொடுத்தது. அதன்பின்னர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் Game changer என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சங்கரின் தெலுங்கு அறிமுகமாகும். இப்படத்தில் ராம் சரண் ஒரு கலெக்டராக நடித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியாகின. மேலும் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. தமன் இசையமைக்கிறார். இப்படம் பொங்கல் சிறப்பு படமாக ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் சுமார் 400 கோடி செலவில் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர் சங்கர் எதற்கு செலவு செய்கிறாரோ இல்லையோ பாடலுக்கு அளவுக்கு அதிகமாகவே செலவிடுவார். இது அவரின் ஸ்டைல் என்றே கூறலாம். இதனால் இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம்.

அந்தவகையில் இந்தப் படத்தின் 5 பாடல்களுக்கு மொத்தமாக 92 கோடி செலவு செய்துள்ளாராம் சங்கர். அதிலும் ‘ரா மச்சா மச்சா’ என்ற பாடலுக்கு மட்டுமே ரூ.20 கோடி செலவு செய்துள்ளனர்.

ஒரு பாடலுக்கு இத்தனை தொகை அவசியமா? என்றுதான் ரசிகர்கள் கேட்கின்றனர். ஏனெனில், இதே பணத்தை தொழில்நுட்ப ரீதியாக செலவிட்டால், படத்தின் தரம் அதிகரிக்கும். குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை எடுக்கும் மலையாள படங்களே இதற்கு உதாரணம்.