மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் ரெடியாகி நீண்ட வருடங்களாக கிடப்பில் உள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில்பிசாசு 2, ‘2025-ம் ஆண்டு வெளியீடு’ என்று அறிவித்துள்ளது. இது குறித்து விசாரித்ததில் மார்ச்சில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார் மிஷ்கின். ஏற்கனவே மிஸ்கின் ட்ரெயின் என்கிற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.