அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமா!

தீர்ப்பை மாற்றி எழுதச் சொன்ன நாட்டாமை சரத்குமார்!

விமான சாகச நிகழ்வில் 5 பேர் பலியான போது யாரை கைது செய்தோம்? அல்லு அர்ஜூனனை கைது செய்தது எந்த விதத்தில் நியாயம் என பாஜகவை சேர்ந்த சரத்குமார்

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஒரு விழாவிற்கு ஒரு பிரபலம் செல்கிறார் என்றால் கூட்டம் வரும். அப்படி கூட்டம் வருகிறது என்றால் அது முன்கூட்டியே போலீசாருக்கு தெரிந்திருக்கும். இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் தியேட்டர் உரிமையாளராவது போலீசாருக்கு சொல்லியிருப்பார். கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது அல்லு அர்ஜூனனை அணுகி நீங்கள் வரவேண்டாம். எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். வந்த பிறகு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதற்கு அவர்தான் காரணம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றேன். விமான வீர தீர சாகசங்கள் நிகழ்வின்போது 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தோம்? ஏர் மாஸ்டரை கைது பண்ணுவீங்களா? அப்படி இல்லை எனும்போது இதில் பாதுகாப்பு சரியாக வழங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் சரியான நேரத்தில் சொல்லாமல் கூட இருக்கலாம். யாரையும் குற்றம் சாட்டவில்லை. அது தேவையா என்பது கூட தெரியவில்லை என்று கூறியுள்ளார்.