லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘விடா முயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
அவரது பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், மகிழ்திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. அன்று முதல் ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு நாளைக்கு நாள் கூடிக் கொண்டே வந்தது என்பது உண்மை.
மேலும் ‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற படத்தின் தழுவல்போல் தெரிகிறது என்ற சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா ப்ரொடக்ஷனிடம் 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாவும் கூறப்படுகிறது.
https://x.com/SureshChandraa/status/1865397173397168470?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1865397173397168470%7Ctwgr%5E12b21c041e9e54bcc6adce68f59b8b843a75bce5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை அஜர்பைஜானில் சில நாள்களுக்கு முன் துவங்கினார். தற்போது, தனக்கான டப்பிங்கை அவர் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.