தளபதி 69 படத்தின் படப் பெயர் புத்தாண்டு அன்று வெளியாகுமா?

கோட் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக எச்.வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இதுதான் தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்திருப்பதால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த KVN எனும் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கோட் படத்துக்காக 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிய விஜய், இந்த படத்துக்காக 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தென்னக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உருவெடுக்கிறார்.

தன்னுடைய எல்லா படங்களிலும் ஏதோ ஒரு அரசியல் பார்வையை முன் வைக்கும் இயக்குனர் வினோத், இந்த படத்திலும் தீவிர அரசியலை பேச இருக்கிறார். அதே சமயம் தீரன் அதிகாரம் ஒன்று பாணியில் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சகமான ஒரு படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்படம் தீபாவளி வெளியீடாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்டர் புத்தாண்டு விருந்தாக வரும் டிசம்பர் 31-ம் தேதி இரவு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. புத்தாண்டு தினத்தில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.