அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் வெளியாகி இருக்கும் படம்.
புஷ்பா முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கும் அதைவிட இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு இருந்தது என்றே சொல்லலாம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை இங்கு பார்க்கலாம்!
புஷ்பா முதல் பாகத்தில் புஷ்பராஜ் ஆக வரும் அல்லு அர்ஜுன் சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து, எப்படி செம்மரக்கட்டைகளை கடத்தும் ஒரு மிகப்பெரிய குரூப்புக்கு தலைவனாகிறார் என்பதோடு மட்டுமல்லாமல், அந்த ஊருக்கு புதிதாக மாற்றுதல் வாங்கி வரும் எஸ்பி பகத் பாசிலிற்கும் அவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனை என்ன என்பதோடு படம் முடியும்.
ஆனால் இரண்டாம் பாகத்தில் எஸ் பி பகத் பாசிலுடைய ஈகோ மட்டும் இல்லாமல் ஒரு மாநிலத்தையே ஆட்சி செய்யும் அளவிற்கு பண பலத்தை எப்படி சம்பாதிக்கிறார் இந்த புஷ்பராஜ் என்பது தான் புஷ்பா 2 தி ரூல் படத்தில் கதை கரு.
படத்தின் ஒட்டுமொத்த வெயிட்டையும் அல்லு அர்ஜுன் தாங்குகிறார். அவருக்கு பக்க பலமாக ராஷ்மிகா மந்தனா கூடவே இருக்கிறார். பகத் பாசில் அல்லு அர்ஜுனுக்கு டப் கொடுத்து மிரட்டி நடித்திருக்கிறார். இப்படி ஒவ்வொருவரது நடிப்பும் படத்தில் தனியாக தெரிவதால் பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்கிறது.
சுகுமாரின் திரைக்கதை நேர்த்தியும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும், பீட்டர் ஹெயினின் சண்டைக் காட்சிகளும், படத்தின் அம்சமான ஒளிப்பதிவு காட்சிகளும் மிக மிக நேர்த்தியாக திரைக்கதையை எடுத்துச் செல்கின்றன. மூணு மணி நேரம் 20 நிமிடம் எப்படி போனது என்று தெரியாத அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடினாலும், அது உலகப் புகழ் பெறும் அளவிற்கு அந்த பாடலும் நடனமும் சிறப்பாக அமைந்துள்ளது.
படத்தின் குறையாக பார்க்கப்படுவது, லாஜிக் என்ற ஒரு வார்த்தை படத்தில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சுத்தமாக இல்லை. நாம் படம் பார்க்கச் சென்றால் நமது மூளையை ஒரு மூலையில் கழட்டி வைத்து விட்டு சென்றால் படம் மிகவும் அற்புதமாக, ரசிக்கும் படியாக, தெலுங்கு மசாலா தனத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக இருக்கும் என்று அடித்துக் கூறலாம்.
படத்தின் சில காட்சிகள் மிக நீண்ட தூரம் இருப்பதால் சளிப்படைய வைக்கின்றன. சினிமாக்களில் அடித்து துவைத்து காய்த்து தொங்க விடப்பட்ட கதை என்பதால், கதையை யாரும் ரசிக்க வரவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. அதை சரி செய்யும் விதமாக திரைக்கதை நேர்த்தியாக இருப்பது சிறப்பு அம்சம்.
இதில் மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுத்திருப்பது சிறப்பு.
ஆக மொத்தத்தில் புஷ்பா 2 தி ரூல் உண்மையிலேயே இந்திய சினிமாவை ரூல் செய்யும்.