தலைவர் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷ்க்கு கல்யாணம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்” படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்றும், மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது.

இதையடுத்து காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ், தனது வருங்கால கணவரான ஆண்டனியுடன், தனக்கு 15 ஆண்டுகளை கடந்தும் பந்தம் தொடர்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. இதில், திருமண தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டிசம்பர் 12ம் தேதி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 2021ல் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்தனர்.

 

இதேபோல், கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ், நடிகர் ரஜினிகாந்த் உடன் நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷ்க்கு கல்யாணம் என்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.