ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த படம் அமரன். இந்தப் படம் கடந்த தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமரன் படக்குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
இது குறித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷன்ல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
மதிப்பிற்குரிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்ததில் பெருமை அடைகிறோம். அமரன் படத்தின் வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று படமென்பதால், இந்தச் சந்திப்பு தேசப்பக்தியை மிகவும் ஆழமாக பிரதிபலிக்கும் உணர்வுடனும் நமது நாட்டு வீரர்களுக்காக அர்ப்பணிப்புடன் படமெடுத்த படக்குழுவை பாராட்டும் விதமாகவும் அமைந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://x.com/RKFI/status/1862478539796410876?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1862478539796410876%7Ctwgr%5E03180360db2a1f80e708e3c755c55e12e287c689%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F