துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் வாழ்த்து!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோன்று திரையுலக பிரபலங்கள் நடிகர் அஜித், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் தனுஷ், நடிகர் சிம்பு ஆகியோரின் பிறந்தநாள் வாழ்த்துக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் முன்னதாக நடிகர் அஜித் கார்‌ ரேஸ் கம்பெனி தொடங்கிய போது தமிழக அரசின் சின்னத்தை பயன்படுத்தியதற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்ததோடு அவர் கார் பந்தயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அவர் திமுகவுக்கு எதிராக இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.