தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு பல படங்களில் நடித்த முன்னணி ஹீரோயினாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளா கொச்சினை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருகிறார். இவர் துபாயை மையமாகக் கொண்டு தொழில் செய்து வரும் நிலையில் பள்ளி பருவத்தில் இருந்து கீர்த்தி மற்றும் ஆண்டனி இருவரும் காதலித்து வருகிறார்கள். நேற்று தன்னுடைய 15 வருட காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்தார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆண்டனி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்.
இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் தன் காதலனை கரம் பிடிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கிறிஸ்தவ மதத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மாறிய பிறகு கோவாவில் வருகிற 11-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. முன்னதாக நடிகை நயன்தாராவும் கிறித்துவ மதத்திலிருந்து திருமணத்திற்கு முன்பு இந்து மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன் 15 வருட காதலை உறுதி செய்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.