அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டி போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்கள் அந்தப் படத்தை வாழ்த்தி, படக்குழுவினரை வாழ்த்து மழையில் நனைய வைத்திருந்த வேளையில் தற்போது நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யும் படத்தின் இயக்குநரை சந்தித்து வாழ்த்தி பேசியுள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு ” என்ன படம் கண்ணா அருமை.. அருமை.. படம் பார்த்துவிட்டு என்னால் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு படம் எமோஷனலாக இருக்கிறது” எனக் கூறி சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியை நேரில் அழைத்து தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்த் மட்டுமின்றி சூர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத், உள்ளிட்ட பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.
அவர்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் படம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்த காரணத்தால் இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியை நேரில் அழைத்து தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். விஜய்க்கு இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி மிகவும் நெருங்கிய நண்பர் என்றே சொல்லலாம். விஜய் கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
அதன்பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்த காரணத்தால் 12 வருடங்கள் சந்திக்காமலிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் 12 வருடங்கள் கழித்து அமரன் படத்தைப் பாராட்டுவதற்காக விஜய் இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது நடந்த புகைப்படத்தை இயக்குநர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு அமரன் படத்தைப் பாராட்டியதற்கு விஜய்க்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
https://x.com/Rajkumar_KP/status/1861375410162016532?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1861375410162016532%7Ctwgr%5Ea38ccab44ca0602a170394187c8e8f6fbcfce8f7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F