சத்ய தேவ், சத்யராஜ்,சுனில், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தெலுங்கு தமிழ் டப்பிங் படம்.
சமீபத்தில் வெளிவந்த லக்கி பாஸ்கர் படத்தின் சாயலில் வெளி வந்திருக்கும் அடுத்த ஒரு பேங்க் ஜாப் பற்றிய படம்.
பிரியா பவானி சங்கர் வங்கிப் பணியின் கடைசி நாளான அன்று, செக் டெபாசிட் செய்யும் போது தவறுதலாக வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றி விடுகிறார். ஆனால் அந்த பயனாளர், பணத்தை உடனே வித்ட்ரா செய்து விடுவதால், பிரியா பவானி சங்கருக்கு பிரச்சனை மேலும் அதிகமாகிறது, அந்த செக்குக்கு சொந்தக்காரர், பிரியா பவானி சங்கருக்கு கடும் நெருக்கடியை தரும் வேளையில், அவருடைய காதலனான சத்தியதேவ் இன்னொரு வங்கி அலுவலகத்தில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக வேலை பார்ப்பதனால், இவருக்கு திருட்டுத்தனமாக உதவ முன் வருகிறார். உதவியும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக வேறு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் கதை.
சக்திவேல் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். சில சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இந்தப் படத்திலும் தனது அபரிமிதமான நடிப்பை காட்டியிருக்கிறார். அவருக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் வருபவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். நடிகர் சுனில் தனக்கென ஒரு நடிப்பு பானியை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரியா பவானி சங்கர் இந்த படத்தின் மூலம், அவரைப் பற்றி வரும் மூடநம்பிக்கை உடைப்பார் என்று நம்பலாம்.
சத்தியராஜ் சமீபகங்களாக தெலுங்கு சினிமாவில் கோளோச்சிக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
திரைக்கதையை பொறுத்தவரை முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் சற்று சறுக்கலையே கொடுத்தது. மேலும் இது தெலுங்கு சினிமா என்பதால், அதற்கான மசாலாக்கள் படம் முழுவதுமே உள்ளன.
இசை மிக ஆறுதல். இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு மிக அருமை. CG காட்சிகள் பெரிதாக ஜொலிக்கவில்லை.
பொதுவாகவே எந்த கதையாக இருந்தாலும் ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு உண்டான பேக் ஸ்டோரி மட்டுமே கதைக்களமாக இருக்கும். ஆனால் இந்தக் கதையில் வில்லனுக்கு பேக் ஸ்டோரி வைத்த இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
இந்தப் படத்தில் குறையாக பார்ப்பது இரண்டாம் பாதி மட்டுமே. ஆங்காங்கே சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருக்கும், ‘இதெல்லாம் தெலுங்கு படத்தில் சகஜமப்பா..!’ என்று எடுத்துக்கொண்டு செல்ல வேண்டியது தான்.
ஆக மொத்தத்தில் ஜீப்ரா படம் அனைவராலும் ரசிக்கக்கூடிய படம். ஆனால் லக்கி பாஸ்கர் படம் பிடித்தவர்களுக்கு, இந்த படம் பிடிக்குமா என்பது சந்தேகமே?