2k லவ் ஸ்டோரி பற்றிய முக்கியமான அப்டேட் வெளியானது!

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’. 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

அறிமுக நடிகர்கள், ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடல் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

https://x.com/disoundfactory/status/1857302054613757961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1857302054613757961%7Ctwgr%5Ef1f77dee5b3423158531d502f0ec97c6e62b4f6d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F