ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர் நடிகராக நடித்துள்ளார் என்றால் அது One &only நட்டி என்கிற நட்ராஜ் மட்டும் தான் .
நடராஜ் அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த அவரின் முதல் படமான சதுரங்க வேட்டை படத்தில் நடித்திருக்கிறார். ஆசையைத் தூண்டி பல வழிகளில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என அழகாக இப்படத்தில் எச் வினோத் அவர்கள் காட்டியிருப்பார். கதாபாத்திரத்திற்கு நடராஜ் அவர்கள் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் அவர் மிளகா போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதிலும் பெரும்பாலான படங்களில் போலிஸ் அதிகாரியாகவே நடித்திருப்பார்.
இவை மட்டுமின்றி தனுஷ் உடன் கர்ணன் படத்திலும், விஜய் சேதுபதி உடன் மகாராஜா படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இதனைப் பற்றி ஊடகம் கேட்டபொழுது, நடராஜ் அவர்கள் எனக்கு திருமணம் என்பது செட் ஆகவே இல்லை என்றும், மனதிற்குள் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் நாம் வேலைக்கு சென்று திரும்பும் வரை நமக்காக ஒரு பெண் நம்முடைய வீட்டில் காத்திருக்க வேண்டும்.
அது அந்தப் பெண்ணிற்கு மிகவும் கஷ்டமானதாக இருக்கும். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. என் அம்மா என்னை தொடர்ந்து திட்டிக்கொண்டு தான் இருப்பார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இவர் கூறியதைப் போன்றே எஸ் ஜே சூர்யாவும் இதே காரணத்தை கொண்டு தான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.