தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக இருக்கும் சிம்பு தனது அடுத்தப்படம் குறித்து வெளியிட்டுள்ள வித்தியாசமான அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து, காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தவர் சிம்பு. அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், மன்மதன் படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமான நிலையில், வல்லவன் படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை நிரூபித்தார். மேலும், பாடகர், பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது குறித்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடைசியாக பத்து தல என்ற படததில் நடித்திருந்த சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்தபடம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
https://x.com/SilambarasanTR_/status/1847963976811917732?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1847963976811917732%7Ctwgr%5E7e3e2933c98636d8d16d5e9832fbc0ae3346c321%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
அதில், ‘டேய் 2கே கிட்ஸ், 90எஸ் மோட்ல நாளைக்கு ஷார்ப்பா 6.06 பி.எம்.க்கு வரேன்’ என்று பதிவிட்டார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிம்பு என்ன அறிவிப்பு கொடுக்கப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. முன்னதாக அக்டோபர் 19-ந் தேதி தம் + மன்மதன் + வல்லவன் + விடிவி+ இன் ஜென் இசட் மோட்= நண்பா நெக்ஸ்ட் என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சிம்பு தனது அடுத்தபடம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சிம்பு வெளியிட்டுள்ள பதிவில், ‘மதிப்புமிக்க ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அன்பான ரசிகர்களும் திறமையும் இளமையும் நிறைந்த இயக்குனர் அஸ்வத் உடன் இணைந்து அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தை தரவிருக்கிறேன். கட்டம் கட்டி கலக்குறோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் சிம்புவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
https://x.com/SilambarasanTR_/status/1848342929976496608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1848342929976496608%7Ctwgr%5E7e3e2933c98636d8d16d5e9832fbc0ae3346c321%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F