தமிழ் சினிமாவில் 30 ஆண்டுக்கும் மேலாக ஹீரோ,வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்து வருகிறார் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் தளபதி விஜய் நடித்த லியோ படதில் ஹரோல்ட் தாஸ் என்கிற அதிரடியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து, ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கி இவர்களின் திருமணம் ஜீன் மாதம் சென்னை கெருகம்பாக்கத்தில் அர்ஜுன் கட்டிய அஞ்சநேயகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து, இவர்களின் ரிஷப்ஷன் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முன்னணி திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீதா பயணம்’ படத்தின் கதாநாயகியாக நடிக்கும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா பற்றிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும்ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் கமிட்டாகி உள்ளார். அவர் கதாநாயகியின் அப்பா வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
6 வருடங்களுக்குப் முன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், ஹீரோவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் அர்ஜூன் படப்பிடிப்பை தொடங்கி உள்ர். ‘சீதா பயணம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.