ராக்கெட் டிரைவர் திரைவிமர்சனம்

காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா மற்றும் புதுமுக நடிகர்கள் விஷ்வத் நாக விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ராக்கெட் டிரைவர்.

அப்துல் கலாம் போல் பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படும் விஷ்வத் வசதி இல்லாத காரணத்தினால் ஆட்டோ டிரைவராக வாழ்கிறார். அவரை விட ஆறு வயது மூத்த பெண்ணாக இருக்கும் சுனைனா அவருக்கு பல சமயங்களில் உதவுகிறார். தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற எரிச்சலுடன் ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகளை நினைத்து அடிக்கடி பொறாமை கொள்கிறார் கோபப்படுகிறார்.

இந்நிலையில் ஒரு மாணவன் காசு இல்லாமல் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இறக்கி விட முடியுமா என்று கேட்கிறான்.

ஆனால் அவன் வெறும் நாலணா எட்டணாக்களை மட்டுமே கையில் வைத்திருக்கிறான். அவன் விஷ்வத்தின் உதவியை கூறுகிறான்.

அந்தக் கல்லூரியில் அவருக்கு யார் அழைப்பு கொடுத்தார்களோ அவரைப் பற்றி கேட்கும் போது அவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்ற உண்மை தெரிய வர, அதிர்ச்சியில் ஆள்கிறான். இறுதியில் அவனுடைய பெயர் என்னவென்று கேட்கும் போது அவன் பெயர் அப்துல் கலாம் என்று கூற, ஆட்டோ டிரைவரான விஷ்வத் வியந்து நிற்கிறான்.

1948 ஆம் ஆண்டு வரவேண்டிய அப்துல் கலாம் 2023ல் வந்தது ஏன்? அதற்கு காரணம் என்ன என்று தேடி கண்டுபிடிப்பதே இந்த படத்தின் கதை.

ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர். அதற்கு அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

முதல் பாதி விறுவிறுப்பாக இல்லாததனால் படம் மிகவும் தொய்வடைகிறது. கலாம் என்ற பெயரில் காமெடி செய்து வைத்திருக்கிறார்கள் என்று கேலி பேச்சும் அங்கங்கே எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.

ஆனால் இரண்டாம் பாதி கதையை ராமேஸ்வரத்தில் நகரும்போது, அது சூடு பிடிக்கிறது. மனிதனுடைய தேவை அவன் ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும் பெரிய பெரிய தேவை தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அது ஒரு சிறிய தேவையாக கூட இருக்கலாம் என்ற கருத்தை முன் நிறுத்துகிறது இந்தப் படம்.

படத்தின் நடிகர்களான விஸ்வத், நாக விஷால் மற்றும் காத்தாடி ராமமூர்த்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது.

படத்தின் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் கவனமாக பண்ணி இருக்கலாம். ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

ஆனால் இந்த படம் திரையரங்குகளில் ஜெயிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியே? ஏனெனில் ஆர்டிஸ்ட் வேல்யு என்று சொல்லக்கூடிய பெரிய ஆர்ட்டிஸ்களும் படத்தில் இல்லை, வித்தியாசமான கதைக்களம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இங்கு இல்லை, பெரிய படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து முதலில் திரையரங்குகளில் திரையிடுவார்கள். அதன் பின்னே தான் இந்த படங்கள் கவனிக்கப்படும். ஆகையால் கேட்பாரற்று இருக்கும் இந்த ஆட்டோ டிரைவர் படம் நல்ல படமாக இருந்தாலும் திரையரங்குகளில் ஜெயிக்காமல் போவது உறுதி.