சமீபத்தில் நடிகர் பார்த்திபன் வந்தே பாரத் ரயிலில் பயணித்திருக்கிறார். அது குறித்த ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் மனு கொடுத்தார்கள். அதனால் நான் புகார் புத்தகத்தை வாங்கி அதில் சில கிறுக்கல்களை எழுதிக் கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும் செல்பவர்கள் பயன் முக்கியம் என்று கம்ப்ளைன்ட் புக்கில் எழுதிய புகைப்படத்தை பார்த்திபன் தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மேலும் அந்த புகாரில், உணவு பரிமாறியவர்கள் சிறப்பாகதான் செய்தனர். ரயில் மிகவும் சுகாதாரமாக தான் இருந்தது. ஆனால் இரவு 7:22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம் என்று அந்த பதிவில் பார்த்திபன் எழுதியிருந்தார். நடிகர் பார்த்திபனின் புகாருக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபனின் புகார் எதிரொலியாக, அந்த உணவு வழங்கும் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.