நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர், இருந்தாலும் அவருக்கு மார்க்கெட் அந்த அளவிற்கு இல்லாமல் தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
இருப்பினும், ஏற்கனவே கிடைத்திருந்த நல்ல பெயர்கள் வீணாய் போனது. இருந்தாலும் அவர் அதை குறித்து கண்டுக்காமல், 90 ml போன்ற படங்கள் நடித்து கொண்டு தான் வந்தார். சினிமா நடிகை என்றாலே பலரும் பல கதை சொல்வார்கள்.
அதிலும், அவர்களது சம்மந்தப்பட்ட ஏதேனும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானாலோ அது உண்மையா? அல்லது எடிட்டிங்கா? என்று கூட ஆராயாமல் நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் மெட்டீரியல் ஆக்குவார்கள். இப்படி பல நடிகைகள் சிக்கி அவர்களது கேரியரை தொலைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்களது பெயர் அடிவாங்குவது முதல் தற்கொலை வரை சென்ற சம்பவம் கூட இங்கு நடந்திருக்கிறது. இது போன்ற பிரச்சினையை ஒரு பெண் தையிரியதுடன் கையாளும் விதமே அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். அது போன்ற ஒரு சம்பவத்தை தான் தற்போது நடிகை ஓவியா கையாண்டுருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை(11.10.24) அன்று 17-வினாடிகள் அடங்கிய ஒரு சர்ச்சை, அதாவது ஆபாசமான ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும், ஓவியாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஏற்கனவே பதிவிட்டிருந்த போட்டோவின் கமெண்ட் பாக்சில் சென்று நெகடிவ்வாக கமெண்ட் செய்தும் வந்தனர்.
அதாவது ஒரு நெட்டிசன், ‘ ஒரு வீடியோஒன்னு வந்திருக்கு மேடம் 17 செகன்ட்ல’ என கேட்டதற்கு ஓவியா அதற்கு “என்ஜாய்” என தக்-லைஃப் கமென்ட் போட்டுள்ளார். மேலும், மற்றொரு நெட்டிசன், ‘இன்னும் லெந்த்தா வீடியோ எடுத்திருக்கலாம்’ என கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு, ‘அடுத்த முறை சகோதரா’ என பதிலளித்துள்ளார். மற்றொருவரிடம் ஓவியா, ‘லிங்க் சென்ட் பண்ணுங்க’ என்றும் கமெண்ட் போட்டுள்ளார். இதன் மூலம், என்னவாக (அந்த வீடியோ உண்மையோ அல்லது மார்ஃபிங்கோ) இருந்தாலும் சரி, என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என கையாளும் இந்த முறையே.. அந்த பிரச்சினை அத்துடன் முடிப்பதற்கு ஒரு ஆயுதமாக அமைந்துள்ளது.
ஓவியா செய்த இந்த தக்-லைஃப்பால் வாயடைத்து தான் போவார்களே தவிர மேற்கொண்டு எதுவும் பேசமுடியாது. அதனால், இது போன்ற பிரச்சினையில் இப்படி முடிவெடுத்ததன் மூலம் ஓவியா பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறி இருக்கிறார், இதனால் பலர் அவருக்கு ஆறுதலாகவும் பேசி வருகின்றனர்.