தமிழ் சினிமாவில் புதுமையைப் புகுத்துவதிலும், வித்தியாசமாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் தனிமுத்திரை பதித்தவர் இயக்குநர் இரா.பார்த்திபன் என்ற இராதாகிருஷ்ணன் பார்த்திபன். அத்தகைய நடிகர் பார்த்திபன் சென்னையிலிருந்து அக்டோபர் 13ம் தேதி கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் சென்றுள்ளர். அப்போது அவருக்குத் தரப்பட்ட உணவு தரமானதாக இல்லை என புகார் அளித்துள்ளார்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்தியன் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது. வந்தே பாரத் ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 19.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படுமோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக்கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம். நன்றி” என இந்தியன் ரயில்வேக்கு அனுப்பும் புகார் மனுவில் இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தன் கைப்பட கடிதம் எழுதி வழங்கியிருக்கிறார்.
அந்தப் புகாரில் பார்த்திபன் குறிப்பிட்ட தகவலின் படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பார்த்திபன் பயணித்து இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அந்த புகார் மனுவின் புகைப்படத்தைப் பகிர்ந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சில குறிப்புகளையும் எழுதியுள்ளார். அதில், ”முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்கிய கேடென சுற்றத்தார் முணுமுணுத்தனர். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன்பெறுதல் முக்கியம்” என நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.