ஜீவா, பிரியா பவானி சங்கர், ஷா ரா, யோகி ஜேபி, விவேக் பிரசன்னா இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜீவாவிற்கும் பிரியா பவானி சங்கருக்கும் கருத்து வேறுபாடுகள் என்பது இருந்தாலும் அவர்கள் கணவன் மனைவி. இதையெல்லாம் கலைவதற்காக விடுமுறை நாட்களில், கடற்கரையோரம் இருக்கும் ஒரு ரெசார்ட்டிற்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் மட்டும்தான் முதல் புது குடித்தனகாரர்கள்.
காலை முதல் மாலை வரை அவர்களுடைய வாழ்க்கை மிகவும் நிம்மதியாக சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. மாலை முடிந்ததும் இரவு நேரம் திடீரென பவர் கட் ஆகிறது. பக்கத்து வீட்டில் ஒரு விளக்கு எரிக்கிறது. ஆனால் அங்கு செல்லும்போது தான் அவர்களுக்கே தெரிகிறது, அவர்களுடைய உருவமே எதிர் வீட்டில் இருக்கிறது என்று. அதிர்ச்சி அடைந்த ஜீவாவும் பிரியா பவானிசங்களும் அங்கே என்ன நடக்கிறது..? எதனால் அவர்கள் இப்படி ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டார்கள்..? என்ன காரணம் என்று தேடி கண்டுபிடிப்பதே இந்த படத்தின் கதை கரு.
இது 2013இல் வெளிவந்த coherence என்ற ஆங்கிலப் படத்தின் official remake ஆகும்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஜீவாவும் பிரியா பவானியும் மிகவும் அழகாகவும் தெரிகிறார்கள். இன்றைய நவ நாகரிக வாழ்க்கை வாழ்பவர்கள் என்று காட்டுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் என்னென்ன..? அதை அவர்கள் எப்படி கலைத்தெடுக்கிறார்கள் என்ற கோணத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படத்திற்கு சாம் C. S இசையமைத்திருக்கிறார். படம் முழுதும் அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பை செல்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் ஃபிலிம் மேக்கிங் மிகவும் அருமையாக உள்ளது.
இதன் ஒரிஜினல் படைப்பான Coherence படத்தில் கிட்டத்தட்ட எட்டு பேர் கதை மாந்தர்களாக இருப்பார்கள் அவர்களை சுற்றித்தான் அந்த கதை நடக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஜீவா பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரை மட்டுமே கதையை நகர்த்திருப்பது தமிழுக்கு ஏற்றவாறு அந்த திரைக்கதையை மாற்றி வடிவமைத்திருப்பது மிகவும் அருமை.
ஆனால் படத்தின் மிகப்பெரிய குளறுபடி என்னவென்றால், இயக்குனர் தன் அறிவாளித்தனத்தை காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திரைக்கதையை மாற்றி மாற்றி யாருக்கும் புரியாத விதத்தில் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி, இந்த படம் ஏதோ கதை சொல்ல வருகிறது என்ற ஆர்வத்தை தூண்டி இருந்தாலும், இரண்டாம் பாதியை எப்பொழுதுப்பா படத்தை முடிப்பீர்கள் என்று கேட்கும்படியாகவே செய்து விட்டது. மேலும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே படம் முழுவதும் நகரச் செய்வது திரைக்கதையை இன்னும் தூய்மை பெறச் செய்கிறது.
இந்த மாதிரியான சில குளறுபடிகள் திரைக்கதையில் நேர்த்தி இல்லாமை ஆகியவையே பிளாக் படம் வெற்றி அடையாமல் போனதற்கு காரணமாக இருக்க முடியும்.
எங்களைப் பொறுத்தவரை இயக்குனர் தனக்குத் தெரிந்த புதுக்கதையை வைத்து படம் எடுத்திருக்கலாம். ஆக மொத்தத்தில் பிளாக் படம், நிஜமாகவே வெறும் பிளாக் படம்.