ஆரகன் திரை விமர்சனம்

பாம்புக்கடியிலிருந்து ஒரு துறவியைக் காப்பாற்றும் இளம் ஹீரோ இளந்திரையன், ஒரு சக்திவாய்ந்த வரத்தை வெகுமதியாகப் பெறுவதைக் காட்டும் அனிமேஷன் காட்சியுடன் ஆரகன் தொடங்குகிறது.

ஒரு இளம் பெண் ஒரு தொலைதூர மலைப்பாதையில் கவனித்துக் கொள்ளும் வேலையை மேற்கொள்கிறாள், அவள் காதலனின் இருண்ட ரகசியங்களில் சிக்கிக்கொண்டாள். அவர்களின் எதிர்காலத்தை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையான படியாகத் தொடங்குவது பண்டைய சடங்குகள் மற்றும் நித்திய இளைஞர்களுக்கான தேடலில் வேரூன்றிய ஒரு கனவாக மாறுகிறது.

தன் காதலனான மைக்கேல் இன் கனவை நிறைவேற்றுவதற்காக, காதலி மகிழினி மழையின் உச்சிக்காட்டில் இருக்கும் ஒரு வீட்டில், தனிமையில் இருக்கும் ரஞ்சனியை பார்த்துக் கொள்வதற்காக home care வேலைக்குச் செல்கிறாள். ஆனால் அந்த அறையில் அவளுக்கு சில பல அமானுஷ்ய விஷயங்கள் தெரிகிறது, கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது. இது மட்டுமில்லாமல் கதையின் நாயகன் ஆனா மைக்கில் அப்போது அப்போது காட்டப்படுகிறார். அவர் கலை ராணியை ஒரு வீட்டில் தனியாக சங்கிலியால் அடைத்து வைத்து soft torture என்று சொல்லக்கூடிய மென்சித்திரவதை செய்கிறார். அதுமட்டுமில்லாமல் காட்டுக்குள் நத்தை நடு ராத்திரியில் சில பல பொருட்களை எடுத்துக்கொண்டு மாய மந்திரங்களை சொல்லி சில வித்தைகளையும் செய்கிறார். இதற்கெல்லாம் காரணம் மைக்கேல் தான் இளந்திரையன் என்றும் அவருக்கு என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் அதற்காக அவர் மேற்கொள்ளும் சித்து வேலைகளே இவை அனைத்தும் என்று இறுதியில் சொல்லப்படுகிறது. இந்த சிலந்தி வேளையில் நாயகியான மகிழினி சிக்கினாரா? இல்லையா? என்பதுதான் கதை.

நாம் இந்தக் கதையை எளிதாக எடுத்துரைத்தாலும் படம் பார்க்கும்போது ஆறகன் ஒரு குழப்பமான படம் என்று புரியவரும். மேலும் இது எங்கு செல்கிறது, என்ன சொல்ல வருகிறது என்று அடிக்கடி யோசிக்க வேண்டியதும் வரும். படத்தில் பேசப்படும் வசனங்களை விட இன்னும் நீ இசை அதிகமாக ஒளிப்பதால் இவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வது கடினமாகிறது.

முதல் பாதியில் ஜோடிகளுக்கு இடையே ஒரு வகையான அழகான காதல் உள்ளது, ஆனால் இது மீதமுள்ள சதித்திட்டத்தை அமைக்க ஒரு தந்திரம் என்ற கற்பனை மிகவும் அருமை.

கதாநாயகர்களான மைக்கேல் தங்கதுரை மற்றும் கவிப்பிரியா இருவருக்கும் ஆரம்பத்தில் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. கவிப்ரியா ஒரு நேர்மையான நடிப்பை வெளிப்படுத்திஇருந்தார், குறிப்பாக அவர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தருணங்களில் மிகவும் அருமையான நடிப்பை காட்டியிருந்தார் . மைக்கேலின் சரவணனின் நடிப்பு, அச்சுறுத்தியதை விட அவர் போட்டிருக்கும் காஸ்டியூம் மிகவும் அச்சுறுத்தலாகவே இருந்தது. இது மாதிரியான ஆடைகளை எங்கிருந்து கண்டுபிடித்தார் என்று இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும். ஸ்ரீ ரஞ்சனி நடிப்பு பெரிதாக கவரவில்லை. அவருக்கு இந்த ரோல் செட் ஆகவே இல்லை. அதைவிட கொடுமை வழக்கமாக ரூ.50 வாங்கினால் 500 க்கு நடித்துக் கொடுக்கும் கலைராணி இந்தப் படத்தில் 5000 ரூபாய் அளவுக்கு நடித்துக் கொடுத்தது தான்.

இயக்குனர் அருண் கே.ஆர் மனதில் ஒரு சுவாரசியமான கருத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது – காதல், த்ரில்லர் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் ஆகியவற்றின் கலவையில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறார் போலும். Continuity என்கிற ஒருங்கிணைப்பு இல்லாமல் திரைக்கதை எங்கெங்கோ செல்வதால், ஆடியன்சின் பொறுமையை சோதித்து, ” எப்பா! நீங்க கதைக்குள்ள வரும்போது சொல்லுங்கப்பா நாங்க அதுவரைக்கும் தூங்கிட்டு இருக்கோம் ” என்று சொல்லும்படி ஆகிவிட்டது. நல்ல கருவை யார் வேண்டுமானாலும் சுமக்கலாம், அதை ஆரோக்கியமான குழந்தையாக பெற்றெடுக்க வேண்டிய பொறுப்பு இயக்குனரின் கையில் மட்டும்தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார். ஆக மொத்தத்தில் ஆரகன் திரைப்படம் ஆஹா… ஓஹோ… படம் அல்ல.