தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இண்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். விரைவில், மலையாளத்திலும் அறிமுகமாகவிருப்பதாக தகவல் வெளியானது.
“ஆன்மிகம்தான் எனக்கு புதிய சக்தியைக் கொடுத்தது. ஆன்மிகம் எனது வாழ்க்கையில் ஒருங்கிணைத்துவிட்டது. அது எனது பணியில் நல்ல மாற்றங்களைக் கொடுத்தது. தற்போதைய சோதனையான கால கட்டத்தில் பல வலிகள், நோய்கள் இருக்கும்பட்சத்தில் எதைவிடவும் ஆன்மிகம் மிகவும் தேவையானதாக இருக்கிறது” என சமீபத்தில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு வழிபாடு செய்தார்.
ஒவ்வொரு வருடமும் இதைப் பழக்கமாக வைத்திருக்கும் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “நான் உங்களது வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி தேவி. அனைவருக்கும் மகிழ்சியான நவராத்தி வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.