நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில் தளபதி 69 படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிடத் தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்று நேற்று முதல் அப்டேட் வெளியிடத் தொடங்கிய படக்குழு, பாலிவுட் பிரபலம் பாபி டியோல் தளபதி 69 படத்தில் களமிறங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இதையடுத்து இன்று படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. (ஏற்கனவே நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவும் விஜய்யும் ஆடியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.)

இந்நிலையில், படத்தில் நடிக்கும் மற்றொரு நபர் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, பிரேமலு திரைப்படம் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் இழுத்த 2கே கிட்ஸ்களின் க்ரஷ் ஆன மமிதா பைஜூ நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
https://x.com/KvnProductions/status/1841440596885479932?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841440596885479932%7Ctwgr%5E24068c20de907bed7eaabb1566078da397e3c1ab%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
பிரேமலு திரப்படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரைப் போல உடைகள் அணிவதையும், முடியை அலங்கரிப்பதிலும் அக்கறை காட்டி வந்தனர். இவர் இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.