ரஜினியை தாக்கிப் பேசுகிறாரா விஜய் ஆண்டனி!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு தளங்களில் தமிழில் பயணம் செய்து வருபவர் விஜய் ஆண்டனி.

அவரது நடிப்பில் தற்போது ஹிட்லர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் முன்னதாக விஜய் ஆண்டனி அதிகமாக ஈடுபட்டிருந்தார்.

இந்த பிரமோஷன்களில் ஹிட்லர் படம் குறித்தும் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தன்னுடைய இசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுவாரசியங்களுடன் பேசியிருந்தார். இந்நிலையில் காவல்துறையில் நீண்ட காலங்களாக இருக்கும் என்கவுண்டர் குறித்தும் விஜய் ஆண்டனி தன்னுடைய கருத்தை கூறி இருந்தார்.


அதாவது தமிழ்நாட்டில் என்கவுண்டர் நீண்ட நாட்களாக உள்ளதாக தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, தன்னுடைய கல்லூரி காலத்தில் கல்லூரி வாசலில் வைத்து ஒரு ரவுடியை போலீசார் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டெயினரில் தமிழகம் வழியாக தப்பிக்க முயன்ற வடமாநில கொள்ளையர்களை நோக்கி காவல்துறையினர் மேற்கொண்ட என்கவுண்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் என்கவுண்டர் குறித்து விஜய் ஆண்டனி தற்போது பேசியுள்ளார். இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் போலி என்கவுண்டரை மையமாக கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வேட்டையின் படத்தை குறி வைத்து விஜய் ஆண்டனி பேசுகிறாரோ என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.