விஜய்யின் கோட் படம் நாடகக் காதலைப் பற்றி பேசுகிறதா..?

நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்துவரும் படம் கோட்.

படத்தின் முதல் காட்சியே, ஏ.ஐ., தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சியான கேப்டன் விஜயகாந்த் இண்ட்ரோ காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது. படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் படக்குழு தரப்பில் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகின்ற நிலையில், இணையத்தில் கோட் படம், நாடகக் காதல் குறித்து பேசுகின்றது என சிலர் இணையத்தில் கம்பு சுற்றி வருகின்றனர். அதாவது ஜீவன் கதாபாத்திரத்தில் உள்ள விஜய், மீனாட்சி சௌத்ரியை காதலிப்பார். அவர் வில்லன் விஜய் என்பதால், தன்னைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டதால், அவரைக் கொலை செய்துவிடுவார். இந்த திரைக்கதையை இணையத்தில் சிலர் படத்தினை நாடகக்காதல் படம் எனக் கூறி வருகின்றனர்.

அதாவது ஜீவன் விஜய் நாடகக் காதல் செய்து, மீனாட்சி சௌத்ரியைக் கொலை செய்கின்றார். இதனைத் தெரிந்து கொண்ட காந்தி கதாபாத்திரத்தில் உள்ள விஜய், ஜீவனைக் கொல்கின்றார் என இணையத்தில் சிலர் கம்பு சுத்திக் கொண்டு உள்ளார்கள். இவையெல்லாம், படக்குழுவினருக்கு குறிப்பாக, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தெரிந்தால் என்னவெல்லாம் கமெண்ட் செய்வார் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.