போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைவிமர்சனம்

விமல், கருணாஸ், ‘ஆடுகளம்’ நரேன் பவன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் மைக்கேல் k ராஜா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் விமலுக்கு, தனது மனைவியின் பிரசவத்திற்காக பணம் தேவைப்படுகிறது. அதற்காக பிரசவ நாள் என்று கூட பார்க்காமல், ஒரு பிணத்தை சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை கொண்டு செல்லும் வேலைக்கு சரி என்று சொல்கிறார். அப்படி பிணத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் கருணாஸ் வழிப்போக்கராக, விமல் இடம் லிப்ட் கேட்டு ஏறி விடுகிறார். சென்னை to திருநெல்வேலி வரை இவர்கள் இரண்டு பேரின் சம்பாசனை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என்பது ஒரு விதமான கதை.

இன்னொரு பக்கம் அவர்கள் கொண்டு செல்லும் பிணத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றிற்காக, இறந்து போன தன் அப்பாவின் பிணத்தை நான் தான் கொல்லி வைப்பேன் என்று இரண்டு பெரிய குடும்பங்கள் அடித்துக் கொள்கின்றன.

இந்த இரண்டு கதைகளும் ஒரு முடிவில் சந்திப்பது தான் இந்தப் படத்தின் இறுதி காட்சி.

இந்தப் படத்தில் கருணாஸ் மிரட்டி இருக்கிறார், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் பார்க்கும் போது அழுகை வரும். விலங்கு படத்திற்குப் பிறகு விமலின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. இப்படியே சென்றால் மீண்டும் விட்ட இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று உறுதியாக சொல்லலாம்.

படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ரகுநந்தன், படத்தை சற்று மேலே உயர்த்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் மறந்து விட்டோம் போல.

படத்தில் வரும் பாடல் காட்சிகள் மிக அழகாக இருக்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவும் மிகவும் அருமை.

படத்தின் குறையாக பார்ப்பது இரண்டாம் பாதியில் கதை ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறது. அதை சரி செய்திருக்கலாம். அதேபோல் முதல் பாதியில் கருணாஸின் மேம்படுத்தப்பட்ட நடிப்பு நமக்கு சற்று எரிச்சலை கொடுக்கும். ஆனால் அது கிளைமாக்ஸில் சரியான விளக்கத்துடன் முடிக்கப்படும்.

மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அழகான வாழ்வியல் படம்.