இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி நிகிலா விமல் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் வாழை.
இது 1990களில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
கதையின்படி கதையில் வரும் நாயகனான சிவனைந்தன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் படிப்பில் படு சுட்டி, ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக அவன் மட்டும் இல்லாது, அவன் ஊருக்காரர்களைச் சார்ந்து இவர்கள் அனைவருமே வாழைத் தோப்பிற்குச் சென்று வாழைத்தார்களை வெட்டி அதை முதலாலியிடம் ஒப்படைத்துவிட்டு தினக்கூலியை பெற்று வீட்டுக்கு செல்வதே வழக்கம். ஆனால் இந்த சிறு பையனான சிவனைந்தனுக்கு அது பிடிக்கவில்லை. இதனால் பள்ளிப்பருவத்தில் அவன் சில சில பொய்களை சொல்கிறான் இந்த பொய்யினால் அவன் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகிறது. இதனால் இனிமேல் பொய்யே செல்லவே மாட்டேன் என்று தன் தாயிடம் அவன் முறையிட்டு இருந்தாலும், படத்தின் இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் ஒரு பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது, ஆனால் இந்த சமயம் அவனது அக்கா அவனுக்கு உதவி செய்கிறார். இந்த உதவியினால் அவங்க அக்காவுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை உருவாகிறது அதே நேரத்தில் இவனுக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை வருகிறது. இந்தப் பிரச்சினையால் இவர்கள் குடும்பம் என்னவாகிறது இவன் என்னவாகிறான் என்பதன் படத்தின் மீதி கதை.
படத்தில் திவ்யா துரைசாமி அந்த ஊர் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். பள்ளிக்கூட ஆசிரியராக வரும் நிகிலா விமல் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராகவே வந்து போகிறார். நடிகர் கலையரசன் கம்யூனிசம் பேசி கதைக்கு தேவையான இடங்களில் அழுத்தத்தை கொடுக்கிறார்.
படத்தின் திரைக்கதையை பொருத்தவரையிலும் சற்று தொய்வு இருந்தாலும் பொறுமையாக பார்த்தால் இந்தப் படம் சொல்லும் வாழ்வியலை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். அதற்குப் பக்க பலமாக இருந்தது ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அவர்களின் கேமரா தான்.
படத்திற்கு இசையாக சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார் இருந்தாலும் சில இடங்களில் சென்னை கானா பாடல்களை புகுத்தி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் கதைக்கு எதற்கு சென்னை கானா பாடல்.
இப்படி வாழைப்படத்தில் பல சுவாரஸ்யமான நல்ல விஷயங்கள் மற்றும் திரைக்கதை அமைப்புகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.
ஆனாலும் இந்த படத்தில் குறையாக பார்க்கப்படுவது எதுவென்றால், எட்டாவது படிக்கும் ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் அம்பேத்கர்
இந்த இடத்தில் தான் மாறி செல்வராஜ் தன்னுடைய சாதத்தை திணிக்கிறார். அம்பேத்கருக்கும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் வாயிலாக வரும் தமிழ் புத்தகத்திற்கு என்ன சம்பந்தம் என்று அவர் தான் கூற வேண்டும்.
ஆக மொத்தத்தில் வாலிபன் ஒருவன் பத்திரிக்கையாளர்களை பார்த்து, இரண்டு மாதத்திற்கு observe செய்யும்படி கூறியிருக்கிறார்கள் சாதியமான படமா என்று கேட்டால், இல்லை என்று அடித்து சொல்லலாம். ஆனால் அதே சமயம் சாதியே திணிப்பு இருக்கு என்பதையும் உறுதிப்படுத்தி சொல்லலாம்.