சூரி அன்னாபென் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் தான் இந்தக் கொட்டுக்காளி.
கொட்டுக்காளி என்றால் பிடிவாதம் பிடித்தவள் அல்லது அடங்காப்பிடாரி என்று வட்டார வழக்கில் சொல்வார்கள்.
இந்த கதையின் கருவும் அதை வைத்தே தான் நகர்த்தப்படுகிறது.
கதைப்படி அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் ஒரு பெண் தலையில் தண்ணி ஊற்றிவிட்டு, இன்னொரு பெண்ணிற்கு விபூதி வைத்துவிட்டு செல்கிறாள். அதன் பின்னால் சூரி உட்பட அவருடைய சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கூடவே செல்கின்றனர். இடையில் காவல் அதிகாரி இடைமறிக்கும் போது தான் தெரிகிறது, சூரியின் அக்கா மகளான அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று. அதன்பின் அண்ணா பென்னுக்கு பிடித்த பேய்யை அவர்கள் விரட்டினார்களா..? இல்லையா..? என்பது தான் படத்தின் ஒட்டுமொத்த கதை.
படத்தில் சூரி மற்றும் அன்னா பென்னை விட சூரியின் தங்கச்சிகளாக வரும் இரண்டு பெண்கள் மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
அதே போல் ஒரு சிறு குழந்தை ஜல்லிக்கட்டு காளையை இழுத்து செல்லும் காட்சி மிகவும் அற்புதமாக மனதை மகிழ்விக்கும் படியாக இருந்தது.
இது மாதிரி பல நல்ல காட்சிகள் இந்த படத்தில் நிறைந்துள்ளன.
ஆனாலும் இந்த படத்தில் முதல் குறையாக பார்க்கப்படுவது எதுவென்றால், எந்த ஒரு படத்திற்கும் முடிவு என்ற ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர், அவருடைய முடிவை சொல்லாமல் மக்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் என்ன புதிர் போட்டி நடத்தும் நீதி அரசர்களா..? எங்களின் கருத்துக்குஏற்ப நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்ய..? அதே போல்தான் உங்களுடைய படத்தின் கதைக்கு நீங்கள் தான் முடிவை சொல்ல வேண்டும். இந்த விடயத்தில் தான் இயக்குனர் மிகவும் பெரிதாக சறுக்குகிறார்.
இதேபோல் இந்தப் படத்தில் இசை இல்லை என்று கூறுகிறார்கள், ஒருங்கிணைந்த இசை என்பது வேறு, கதைக்குத் தேவையான இயற்கை சார்ந்த இசை என்பது வேறு. இந்தப் படத்தில் அது போல் இயற்கை சார்ந்த இசையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் இசையமைப்பாளரை இல்லாமல் தமிழில் முதல் முதலில் வெளிவந்த படம் கொட்டுக்காலி என்று யாராவது கூறினால் அது அபத்தம் அதற்கு முன்னமே இயக்குனர் கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் நடுநிசி நாய்கள் என்ற படம் வந்துவிட்டது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று இன்றுவரை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி யாருமே இல்லை.
எப்படி இந்த படத்தின் குறையாக பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் அதைத் தாண்டி மிக முக்கியமாக, இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இயக்குனரான மிஷ்கின், ஒருவேளை இந்த படம் ஓடவில்லை என்றால், நான் நடுத்தெருவில் அம்மணமாக ஆடுகிறேன் என்று கூறியிருந்தார்.
அதைப் பார்ப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலானோருக்கு, மனவலிமை இல்லாத காரணத்தினால் இந்த படம் நல்லா இருக்கிறது என்று கூற வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது.