டாப்ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , ஊர்வசி , சமுத்திரகனி , கே.எஸ் ரவிக்குமார் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இபடத்தில் நடித்துள்ளார்கள். இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்ததுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகி இருக்கும் அந்தகன் நடிகர் பிரசாந்தின் கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சினிமா பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் அந்தகன் படத்தின் வசூல் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்தகன் படம் முதல் நாளில் இந்தியளவில் 65 லட்சம் வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ரூ1.19 கோடி வசூலித்ததாகவும் 3 ஆவது நாளில் 1.15 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் மூன்று நாட்களில் அந்தகன் படம் இந்தியளவில் 2.99 கோடி வசூலித்துள்ளது. விமர்சன ரீதியாகவும் படம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் தற்போது வசூல் ரீதியாக சிறப்பான ரிஸல்ட் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி , ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. இதில் டிமாண்டி காலணி மற்றும் தங்கலான் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படங்கள் வெளியானால் அந்தகன் படத்தின் வசூலில் சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.