தங்கலான் படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத ஞானவேல் ராஜா.

விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

கோலார் தங்க வயலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

‘நான் மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறேன், படத்தை பார்த்துவிட்டு உடனே விக்ரம் அண்ணாவுக்கும் பா. ரஞ்சித் இருவருக்கும் போன் கால் செய்து பேசினேன். படத்தின் முதல் பாதியை பார்த்து கொண்டிருக்கும் போதே எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி படத்தை நான் தயாரித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.