வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியீடு விழா எப்போது நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் நடிகர் விஜய்யின் பேச்சு, சினிமா மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்று வருவதே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படாமல் நேரடியாக வெற்றி விழா மட்டுமே நடக்கும் என சொல்லப்படுகிறது.

விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடக்கவுள்ளது.

அதனால் அதற்கு முன்பாக வேறு எந்த நிகழ்ச்சியிலும் பேசவோ தோன்றவோ வேண்டாம் என முடிவு செய்தே விஜய் இதை தவிர்த்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ஏற்கெனவே, மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.