இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், சின்னி ஜெயந்த் சாம்ஸ், யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜப்பான், விமானப்படை தாக்குதலின் மூலம் இந்தியாவின் மீது குண்டு போடுவதற்காக நுழைந்ததாக மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய வதந்தி பரவுகிறது. இதை நம்பி மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள எதுவும் தெரியாத மக்கள் உயிர் பிழைத்துக் கொள்ள ஆங்காங்கே தப்பித்து ஓடுகிறார்கள், அதில் ஒரு சிலர் மட்டும் கடல் வழி மார்க்கமாக தப்பிக்க நினைக்கிறார்கள். அதனால் ஒரு படகு ஒட்டியிடம் உதவி கேட்கிறார்கள். அந்தப் படகோட்டி அவர்களுக்கு உதவி செய்தானா இவர்கள் தப்பித்தார்களா என்பதை படத்தின் கதை..!
படத்தின் மிகப்பெரிய பலம் ஜிப்ரானின் இசை.
சின்னி ஜெயந்த், சாம்ஸ், யோகி பாபு, கௌரி கிஷன், மற்றும் சில நடிகர்கள் அவர்களுடைய நடிப்பை மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு மிக மிக அருமை. இரண்டரை மணி நேரம் வெறும் கடலை மட்டுமே காட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காட்சிகளிலும் ஒரு அழகியல் தேவைப்படும். அந்த அழகியல் இந்தப் படத்தில் உள்ளது.
கதையின் ஒரு மிகப்பெரிய, முக்கியமான புள்ளியாக வந்தேறிகளால் பூர்வீக குடியைச் சார்ந்த மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த கதை உணர்த்துகிறது.
ஆனால் இதன் திரைக்கதை தான் மிகப்பெரிய பலகீனமாக பார்க்கப்படுகிறது. வந்தேறிகளால் பூர்வ குடிமக்கள் எவ்வளவு இழிவாகவும் துச்சமாகவும் நடத்தப்படுகிறார்கள் என்ற கோணத்தில் படத்தை எடுத்துச் சென்று இருந்தாலே மிக அருமையாக வந்திருக்கும். அதை விட்டுவிட்டு ஜாதிய பிரச்சனைகள், மதரீதியான பிரச்சினைகள், பீரியட் பிலிம் என்று சொல்லிக்கொண்டு தற்கால பிரச்சினைகளைப் பற்றி பேசுவது மிகவும் அபத்தமாக உள்ளது.
சிம்பு தேவன் Fantasy with comedy வகையான படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். காட்சி அமைப்பும் சரி, செட் ஒர்க் என்று சொல்லக்கூடிய அரங்க அமைப்புகளும் சரி அவருக்கு அத்துபிடி, ஆனால் இது இரண்டுமே படத்தில் மிஸ்ஸிங். மேடை நாடகம் போல் அடுக்கடுக்காக வசனங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

சினிமா என்பது காட்சிகள் சார்ந்த ஊடகம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். பிறகு ஏன் இந்த அடுக்கடுக்கான வசனம்?
அதாவது பரவாயில்லை நகைச்சுவையாவது நகைக்கும் படியாக இருக்கிறதா என்றால் அதுவும் குறைவு.
படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான சுயநலத்தை கொண்டுவர பார்த்திருக்கிறார். ஆனால் அதற்காக பலர் பலி ஆடு ஆகிறார்கள் என்பது தான் உண்மை.
ஆக மொத்தம் சிம்பு தேவனின் Boat படமானது கோட் படமாக வாய்ப்பே இல்லை.
