கமலை போல் மோசமான கேரக்டரை நான் பார்த்ததே இல்லை : தாடி பாலாஜியின் மனைவி காட்டம்.

நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர்.

நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம், தோல்வியடைந்தது.

கமல் ஹாசன் என்றால் குழந்தை முதல் பெரியவர்வரை தெரியும். தனது 8ஆவது வயதிலேயே கேமரா முன்பு நின்று, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கொஞ்சம் மழலை முகத்துடன் எந்தவித பதற்றமுமின்றி நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் பயணப்பட்ட அவர் முதலில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

இந்தச் சூழலில் கமல் ஹாசன் பற்றி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி காட்டமாக பேசியிருக்கிறார்.

நித்யா பேட்டி: இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜியின் முன்னாள் மனைவி நித்யா அளித்த பேட்டி ஒன்றில், “கமல் ஹாசன் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவரைப் பற்றி இப்போது பேச வேண்டாம். அப்படி பேசினால் நான் நிறைய கண்டெண்ட்டை கொடுக்க வேண்டியதாக இருக்கும். அவரைப் போல ஒரு மோசமான கேரக்டரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றார்.